திருமயம் ஒன்றிய ஊராட்சி பணியாளர்கள் சார்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

திருமயம் ஒன்றிய ஊராட்சி பணியாளர்கள் சார்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு
X

திருமயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பணியாளர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தென் மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் புதன் கிழமை அனுப்பி வைக்கப்பட்டது

திருமயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பணியாளர்கள் சார்பில் தென் மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் புதன்கிழமை அனுப்பப்பட்டது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அன்றாட உணவுக்கு சிரமப்பட்டு வருகின்றனர். மழையினால் உடைமைகளை இழந்த மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு துறை அமைச்சர் களும் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

அதேசமயம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர் கள் மற்றும் ஊராட்சி, ஒன்றிய பணியாளர்கள் தென் மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தனர்.

இதனை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், நளினி ஆகியோர் தலைமையில் நன்கொடை பெறப்பட்டு இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்ய முன்வந்த திருமயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பணியாளர்களின் மனித நேயம் அனைவரும் பாராட்டியுள்ளனர்..



Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!