/* */

மழை, இயற்கை பேரிடர் காலத்தில் மக்களை மீட்பது குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலுள்ள பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது

HIGHLIGHTS

மழை, இயற்கை பேரிடர் காலத்தில் மக்களை மீட்பது குறித்து பள்ளியில் விழிப்புணர்வு
X

பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் நடத்திய விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வட கிழக்கு பருவமழை, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள்,தன்னை தானே எவ்வாறு பாதுகாத்து கொள்வது பற்றிய விழிப்புணர்வு ஒத்திகை செயல்விளக்கம் மாணவ, மாணவிகள் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது.

தீ தொண்டு வாரத்தையொட்டி திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் சரவணக்குமார் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை பானுப்பிரியா ஆலோசனையின்படி பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில், அப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வாகன விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, நீர்நிலைகள், இயற்கை இடர்பாடுகள், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கித்தவித்தால் பொது மக்களை எவ்வாறு மீட்பது குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் செயல் முறை ஒத்திகை மூலம் செய்து காண்பித்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தீ விபத்து நிகழும் போது முன் தீ தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க வேண்டும்,தீ விபத்து மற்றும் பாம்பு, மாடு, ஆடு, ஏதேனும் விபத்து என்றால் 101 எண்கள் மூலம் தீ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினார். இதில் அப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவ,மாணவிகள் என 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 April 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!