காலில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற சிறுவர்களுக்கு பண உதவி செய்த புதுக்கோட்டை கலெக்டர்

காலில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற சிறுவர்களுக்கு பண உதவி செய்த புதுக்கோட்டை  கலெக்டர்
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காலணி இல்லாமல் நடந்து சென்ற  சிறுவர்களுக்கு காரை நிறுத்தி காலணி வாங்க கலெக்டர் கவிதா ராமு பணம் கொடுத்தார்.

காலில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற சிறுவர்களை கலெக்டர் கவிதா ராமு பார்ததுவிட்டு செருப்பு வாங்கிக்கொள்ள பணம் கொடுத்து உதவியது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற கவிதா ராமு மாவட்டத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகிறார். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் சாலைப் பணி, குடிநீர் பணிகள் உள்ளிட்டவைகளை நேரடியாக பணிகள் நடக்கும் இடத்திற்கே சென்று அதை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

கலெக்டரிடம் செருப்பு வாங்க பணம் பெற்றுக்கொண்ட சிறுவர்கள்.

அதன்படி, நேற்று பொன்னமராவதி பகுதியில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, அப்பகுதியில் வாகனத்தில் செல்லும்போது இரண்டு சிறுவர்கள் சாலைகளில் காலணி இல்லாமல் நடந்து சென்றதை பார்த்த மாவட்ட கலெக்டர் அந்த சிறுவர்கள் இரண்டு பேரையும் அழைத்து என்ன படிக்கிறீர்கள்?, எந்த ஊர்? என்று அவர்களிடம் விசாரித்து, காலணி இல்லாமல் நடந்து சென்ற சிறுவர்களுக்கு பணம் வழங்கி காலணியை வாங்கிக் கொள்ளுங்கள் என சிறுவர்களுக்கு பண உதவி செய்தது அருகில் இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!