புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மீன்பிடித்திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஏனாதி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் பங்கேற்ற கிராம மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள ஏனாதி பெரிய கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு பொன்னமராவதியை சுற்றி உள்ள கிராமங்களான மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூர், வலையப்பட்டி, தொட்டியம்பட்டி, வார்ப்பட்டு, கட்டையாண்டிபட்டி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கண்மாயில் மீன்பிடி திருவிழாவிற்கு வந்தனர்.
இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் ஊராட்சி மன்ற தலைவர் கரை மேல் உள்ள விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து தீபாரதனை காண்பிக்கப்பட்ட பின்னர் வெள்ளைத்துண்டை வீசி தொடக்கி வைத்தார். பின்பு பொதுமக்கள் பெரியகண்மாயில் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினர். இதில் பொதுமக்கள் ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கெண்டை, கெளுத்தி, அயிரை, விரால், சிலேப்பி, குரவை உள்ளிட்ட பலவகை மீன்கள் பிடித்தனர். பொதுமக்கள் சிலரின் வலையில் தண்ணீர் பாம்புகள் சிக்கியதால் ஏமாற்றமடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu