நரிக்குறவரின மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கல்

நரிக்குறவரின மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கல்
X

 திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் வருவாய் துறையின் சார்பில் விளிம்பு நிலை மக்கள் 59 பேர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற் கான ஆணைகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெள்ளிக்கிழமை (13.10.2023) வழங்கினார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளியோர் நலன் காப்பதில் ஏராளமான நலத்திட்டங்களை இந்தியாவிற்கே முன்னோடி யாக தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்றால் அது மிகையல்ல. இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதாரம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது.

அதன்படி, வருவாய் துறையின் சார்பில், விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், அவர்களின் நீண்ட கால கனவினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் விளிம்பு நிலையில் உள்ள 59 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிக ளுக்கு விலையில்லா வீடுகள் கட்டி தருவதற்கு உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள், அனைவரும் தமிழக அரசால் செயல் படுத்தப்படும் இதுபோன்ற பல்வேறு நலத் திட்டங்களை உரிய முறையில் பெற்று முன்னேற்றம் அடைய வேண்டும் என சட்டம், நீதி மன்றங்கள், சிறைச் சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், வட்டாட்சியர் புவியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil