புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஒன்றியங்களில் 1,313 பேருக்கு சைக்கிள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் மற்றும் பொன்னமராவதி ஒன்றியங்களில்1,313 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் மற்றும் பொன்னமராவதி ஒன்றியங்களில்1,313 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம், திருமயம் மற்றும் பொன்னமராவதி ஒன்றியங்களில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.
அதன்படி, அரிமளம் ஒன்றியத்தில் கல்லூர் - 64, கீழாநிலைக்கோட்டை அய்யாக்கண்ணு - 84, கழனிவாசல் - 158, தாஞ்சூர் - 39, அரிமளம் - 244, கடியாப்பட்டி ராமச்சந்திரபுரம் உலகப்பர் - 171 மற்றும் திருமயம் ஒன்றியத்தில் குழிபிறை - 210, மேலத்தானியம் - 64, நகரப்பட்டி - 101, மேலச்சிவபுரி - 178 ஆகிய மேல்நிலைப்பள்ளிகளில் ஆகமொத்தம் 1,313 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் வழங்கி பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில்கொண்டு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு சென்றுவர விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
விலையில்லா மிதிவண்டிகள் மூலம் தினசரி பள்ளிக்கு சென்று வருவதால் நல்ல உடற் பயிற்சியாகவும் அமைகிறது. இதுபோன்ற தமிழக அரசின் நலத்திட்டங்கள் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தினை தூண்டுவது மட்டுமல்லாமல், கல்வியில் இடை நிற்றலையும் தவிர்க்கிறது என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கருணாகரன் (பொ) (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்), மாவட்ட கல்வி அலுவலர்கள் எம்.மஞ்சுளா, மணிமொழி, பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, மாவட்ட கல்வி துணை ஆய்வாளர்கள் குருமாரிமுத்து, வேலுசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu