பொன்னமராவதி ஷைன் லயன்ஸ் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு

பொன்னமராவதி ஷைன் லயன்ஸ் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு
X

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் நடந்த ஷைன் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Shine Lions Association new executives take charge

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஷைன் லயன் சங்கத்தின் 2022-23 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்றுக்கொண்டனர்.

பொன்னமராவதி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஷைன் லயன்ஸ் சங்க பணியேற்பு விழா மனமுகந்தராஜா தலைமையில் நடைபெற்றது. தர்மராஜ் கணேசன் முன்னிலை வகித்தார். சாசனத்தலைவர் சோலையப்பன் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் எஸ். வீரபாண்டியன் கலந்து கொண்டு பொன்னமராவதி ஷைன் லயன்ஸ் சங்கத்தின் 2022-23 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சுப்பையா ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார்.

இப்பதவி ஏற்பு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன . இதில் மண்டலத் தலைவர் சிங்காரம், வட்டாரத்தலைவர் வெள்ளைச்சாமி, வடிவேல், செல்வம், சுரேஷ், ராஜகோபால், மூர்த்தி, பாலகிருஷ்ணன், ஜகுபர் சாதிக் அலி, லயன் சங்கத்தினர், ஷைன் லயன் சங்கத்தினர், ராயல் சங்கத்தினர், சிட்டி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business