பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!

பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!
X

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள வீடுகள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் காரையூரில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அம்மன் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதியில் 15 நபர்களுக்கும் மற்றும் காரையூர் பகுதியில் 15 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு குளோரின் பவுடர் போடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையில் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

#instanews #tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #coronaaffect #30people #coronavirus #CoronaSpread #Corona2ndWave #பொதுமக்கள்அச்சம் #peoplefear #Ponnamaravathi #Karaiyur #பொன்னமராவதி #lockdown #selfawareness #stayhome #staysafe #publicfear #public #corona #covid-19 #covid

Tags

Next Story