பொன்னமராவதியில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு

பொன்னமராவதியில்  முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு
X

பொன்னமராவதியில் முகக்கவசம் அணியாமல் வாகனத்தில் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தால் காவல்துறையினர்

முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200, 500 வீதம், 80 நபர்களிடம் மொத்தம் ரூ. 8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காந்தி சிலை முன்பு காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியவை இணைந்து முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று மூன்றாவது அலை வரும் முன் தடுக்கும் விதமாக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இன்று மாலை இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வரும் பொதுமக்களிடம், முகக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியும், முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200, 500 வீதம் 80 நபர்களிடம் மொத்தம் ரூ. 8000 அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என்று ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!