பாஜக சார்பில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்: மக்கள் சந்திப்பு ஆலோசனைக் கூட்டம்

பாஜக சார்பில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்:  மக்கள் சந்திப்பு  ஆலோசனைக் கூட்டம்
X
பொன்னமராவதி பாஜக சார்பில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள சேதுராமன் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் எனும் மக்கள் சந்திப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பெயரில் பொன்னமராவதி தெற்கு ஒன்றியத்தில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் வேந்தன்பாலா தலைமை வகித்தார்.

முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் மற்றும் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் சிவசாமி,முன்னாள் ஒன்றிய தலைவர் கார்த்திக், ஒன்றிய துணைத் தலைவர் தச்சம்பட்டி சரவணன், மயிலாப்பூர் பெரியசாமி அம்பலம், கண்டியாநத்தம் சிவகுமாரி இராசு, செவலூர் ராமகிருஷ்ணன்,நாட்டுக்கல் வெள்ளைச்சாமி,தர்மராஜா, கருப்பையா, வடிவேலு, மலையாண்டி, அருண், சேகர், விஜயகுமார், வார்பட்டு ஆனந்த், பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!