திருமயம், பொன்னமராவதி பகுதிகளில் புதிய மின்மாற்றிகள்:அமைச்சர் ரகுபதி தொடக்கம்

திருமயம், பொன்னமராவதி  பகுதிகளில் புதிய மின்மாற்றிகள்:அமைச்சர் ரகுபதி தொடக்கம்
X

திருமயம், பொன்னமராவதி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியை இயக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. உடன் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

திருமயம் பொன்னமராவதி பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன

திருமயம், பொன்னமராவதி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழச்சியில், பங்கேற்ற சட்ட அமைச்சர் ரகுபதி மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம், திருமயம் கோட்டம், திருமயம் உபகோட்டம், நச்சாந்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட உயர்நிலை நீர்தேக்க தொட்டி மின்விசை கூடுதல் மோட்டார் பம்பு அமைப்பதற்கு மின்வாரியத்தால் ரூ.6,55,580 மதிப்பில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி மூலம் மல்லாங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நிறைவான மின்அழுத்தம் வழங்கப்படும். மேலும் இந்த நீர் தேக்க தொட்டி மூலம் மல்லாங்குடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தேவை நிறைவு செய்யப்படும்.

குலமங்கலம் கிராமத்தில் குறைவான மின் அழுத்தம் சரிசெய்தல் தொடர்பாக ரூ.4,52,370 மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுவட்ட கிராமப் பகுதிகளான குலமங்கலம் சுற்றியுள்ள 500 வீடுகள், விவசாய பம்பு செட்டுகள் மற்றும் இதர தொழிலகங்கள் இதன் மூலம் நிறைவான மின்அழுத்தம் அளிக்கப்படும்.

பொன்னமராவதி உபகோட்டம், காரையூர் பிரிவு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட நல்லூர் ஊராட்சியில் உள்ள கீரங்குடி கிராமத்தில் தாழ்வழுத்த மின்நிலைமையை சரிசெய்வதற்கு ரூ.4,52,370 மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கீரங்குடி, சுந்தரம்நகர் மற்றும் இளநிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 158 வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் விவசாய பம்புசெட்கள் மூலம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்று.எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இதில், வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, எம்.எஸ்.தண்டாயுதபாணி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.அழகு(எ)சிதம்பரம், ஊராட்சிமன்றத் தலைவர்கள் விஜயா கருப்பையா (மல்லாங்குடி), ஏ.பழனிவேல் (குலமங்கலம்), ராமையா (நல்லூர்) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil