புதுக்கோட்டை அருகே புதிய மின் மாற்றி : அமைச்சர் ரகுபதி துவக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி மலையலிங்கபுரத்தில், புதிய மின்மாற்றியினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி மலையலிங்கபுரத்தில், புதிய மின்மாற்றியினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்றத் திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மின்விநியோகம் சீராக தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நச்சாந்துப்பட்டி மலையலிங்கபுரத்தில் புதிய மின்மாற்றி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
நச்சாந்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி மின்விசை கூடுதல் மோட்டார் பம்பு அமைப்பதற்கு மின்வாரியத்தால், ரூ.9,87,260 செலவில் 63KVA/22KV புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மலையலிங்கபுரம் அதனை சுற்றியுள்ள 150 வீடுகள், நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் இதர தொழிலகங்களுக்கு நிறைவான மின் அழுத்தம் வழங்கப்படும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் மின்சாரத்தினை நல்ல முறையில் பயன்படுத்திட வேண்டும் என சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், செயற்பொறியாளர் எம்.ஆனந்தாய், உதவி செயற்பொறியாளர் ராமநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu