பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

பொன்னமராவதியில் ரோட்டரி சங்கத்தின் 2022-2023 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது

பொன்னமராவதியில் ரோட்டரி சங்கத்தின் 2022-2023 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது.

பொன்னமராவதி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொன்-புதுப்பட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா ரோட்டரி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் ஆளுநர் ரோட்டரி அ.லெ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2022-2023 ஆண்டின் தலைவராக மலைச்சாமி, செயலாளராக முனைவர்.முடியரசன், பொருளாளராக முத்துக்குமார் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்து வாழ்த்துரையாற்றினார். இப்பணியேற்பு விழாவில் நலிவடைந்த குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் ரோட்டரி துணை ஆளுநர் முருகராஜ்,மண்டல செயலாளர், நிர்வாகம் பாண்டியன், மண்டல செயலாளர், செயல் திட்டம் ஆரோக்கியசாமி, ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். ரோட்டரி மலைச்சாமி வரவேற்றார். முனைவர். முடியரசன் நன்றி கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!