பொன்னமராவதி அருகே புதிய கலையரங்கம்: அமைச்சர் ரகுபதி திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் கைவேலிப்பட்டி கிராமத்தில் புதிய கலையரங்கை திறந்து வைத்த சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், சேரனூர் ஊராட்சி, கைவேலிப்பட்டியில் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், சேரனூர் ஊராட்சி, கைவேலிப்பட்டியில், புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (12.06.2022) திறந்து வைத்தார்.பின்னர் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், சேரனூர் ஊராட்சி, கைவேலிப்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் மற்றும் ஆலங்குடி பகுதிகளில் அரசு கலை அறியவில் கல்லூரி அமைய வழிவகை ஏற்படுத்தியுள்ளார்கள். இதன்மூலம் கிராமப்புறங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இப்பகுதிகளிலேயே பயில்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.மேலும் இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளான சாலைவசதி, பேருந்துவசதி போன்றவை அனைத்தும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இப்பகுதி பொதுமக்கள் இக்கலையரங்கத்தினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி .
இந்நிகழ்ச்சியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்; சதாசிவம், தென்னலூர் பழனியப்பன், ஊராட்சிமன்றத் தலைவர் காமராஜ், மேலத்தானியம் ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu