புதுக்கோட்டை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்
X

திருமயம் அருகே  நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான இளைஞருக்கு பணி நியமன ஆணைகளையும் மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பில் இலவச திறன் பயிற்சிக்கான சான்றிதழ் களையும் வழங்கிய சட்ட அமைச்சர் ரகுபதி

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரகஃநகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்ற, சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (23.12.2023) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முகாமில் பங்கேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளவர் களுக்கு பணி நியமன ஆணைகளையும் மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பில் இலவச திறன் பயிற்சிக்கான சான்றிதழ் களையும் வழங்கினார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்கள், மாணவ, மாணவிக ளின் நலனிற்காக எண்ணற்ற பல்வேறு சிறப்பான திட்டங்களையும், வேலை வாய்ப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 100 சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது. அந்தவகையில் இன்றையதினம் திருமயம் ஊராட்சி ஒன்றியம், செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா தொடக்கி வைக்கப்பட்டது.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 104-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். அயல்நாட்டு வேலை வாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்து ஆணைகள் வழங்கப்படுகிறது.

இத்தனியார் துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை நாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி இளைஞர்களும் பங்கேற்று, தங்களது தகுதிகளுக்கேற்ப பணி நியமனங்களை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே இளைஞர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் இது போன்ற வேலை வாய்ப்பு முகாம்களை உரிய முறையில் பெற்று தங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவர் மேகலாமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொது) மோ.மணிகண்டன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (தொ.வ) பெ.வேல்முருகன், உதவி திட்ட அலுவலர் கே.தில்லைமணி, செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மேலாண்மை இயக்குநர் ஆர்.வயிரவன், முதன்மை செயல் அலுவலர் எஸ்.கார்த்திக், அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், வட்டாட்சியர் புவியரசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா