மஹா சிவராத்திரியை முன்னிட்டுஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி

மஹா சிவராத்திரியை முன்னிட்டுஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி

பல்வேறு மாவட்டங்களிலிருந்து 891 காளைகளும் இந்தக் காளைகளை அடக்க 347 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் பொன்மாசிவலிங்க அய்யனார் கோயில் பெரிய கன்மாய் திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து துவக்கிவைத்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து திருச்சி, மதுரை,புதுக்கோட்டை, தஞ்சாவூர்,ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 891 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை அடக்க 347 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவ பரிசோதனைகள் மாடுபிடி வீரர்களுக்கு செய்யப்பட்டு ஒவ்வொரு குழுக்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் களத்திற்கு இறக்கி விடப்பட்டனர்.ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறை உறுதிமொழியை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்.

வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் விழா கமிட்டி சார்பாக கட்டில், செல்போன், குக்கர், அண்டா, குத்துவிளக்கு, LED டிவி,ரொக்கபரிசு உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன.

விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.அவசர உதவிக்காக மருத்துவ குழுவினர்கள் நியமிக்கப்பட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் திரளாக கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil