கடந்த ஆண்டில் மழையில் நனைந்த 4,507 நெல் மூட்டைகளை ஏலம் விட நடவடிக்கை

கடந்த ஆண்டில் மழையில் நனைந்த 4,507 நெல் மூட்டைகளை ஏலம் விட நடவடிக்கை
X

திருமயத்திலுள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் போர்த்தி வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழையில் நனைந்த நெல்மூட்டைகளை ஏலம் விட நுகர்பொருள் வாணிபக்கழகம் முடிவு செய்துள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மழையில் நனைந்த 4,507 நெல் மூட்டைகள் ஏலம் விடுவதற்கு நுகர் பொருள் வாணிப கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது..

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே துளையானூரில் நுகர்வோரில் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இங்கு பாதுகாக்கப்படுகிறது அதன் பிறகு அங்கிருந்து நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்த நிலையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன அப்போது பெய்த மழைக்கு 4507 மூட்டைகளில் இருந்த ரூபாய் 36 லட்சம் மதிப்பிலான 126 டன் நெல் பாதிக்கப்பட்டது இது குறித்து நுகர்பொருள் வாணிப கழகத்தில் உயர் அலுவலர் அங்கு சென்று ஆய்வு செய்தார்.

இதனை அடுத்து பணியில் அலட்சியமாக இருந்த குடோன் இளநிலை தர ஆய்வாளர் ரவி இளநிலை உதவியாளர் சரவணன் ஆகியோர் கடந்த மே மாதம் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு தானியங்களை பாதுகாக்கும் விதமாக துளையானூர் அழியா நிலை உட்பட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தகர சீட்டுகளால் வேயப்பட்ட கிடங்குகள் கட்டப்பட்டன.

இந்நிலையில் மழையில் நனைந்த நெல்மணிகள் 18 மாதங்களுக்கு மேலாக கிடங்கிலேயே வைத்திருந்தனர். மேலும் உணவுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இந்த நெல்மணிகளை கால்நடை தீவனமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் இங்குள்ள 126 டன் நெல்மணிகளை மனிதர்களுக்கான உணவுகளுக்கு பயன்படுத்தக் கூடாது கால்நடை தீவனத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுக்கோட்டை நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர் கூறிய போது டெண்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இரண்டு வாரங்களுக்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு மழையால் பாதிக்கப்பட்ட நெல்மூட்டைகள் அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது