தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த ஐந்து பேர் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த  ஐந்து பேர் கைது
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கடைவீதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக பொன்னமராவதி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அந்த பகுதியில் போலீஸார் ரோந்து மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பொன்னமராவதி கடைவீதி பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஐயாக்கண்ணு, பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த ரவிராஜன், சிவக்குமார், நாச்சியப்பன், நிஜந்தன் உள்ளிட்ட ஐந்து நபர்களை ‌ கைது செய்து அவர்களிடமிருந்த 81ஆயிரத்து 340 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.பொன்னமராவதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்த 5 பேரை காவல்துறை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!