ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கிய கொடையாளர்கள்

ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கிய கொடையாளர்கள்
X

பொன்னமராவதி ஒன்றியம் காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ. அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் ஏற்பாட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது

பொன்னமராவதி ஒன்றியம் காமராஜ் நகர் ஏபிஜெ. அப்துல்கலாம் மக்கள் நலச்சங்க ஏற்பாட்டில் பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது

பொன்னமராவதி ஒன்றியம் காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ. அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் ஏற்பாட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் ஊராட்சி பொன்-பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 32 இஞ்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சி வழங்கப்பட்டது. காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகப் பணியாளர் விமல் தலைமை வகித்தார். காவலர் விக்னேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

மாந்தக்குடிப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதிராஜா, கே.நெடுவயல் ஊராட்சித் தலைவர் சரவணன், மேலைச்சிவபுரி தொழிலதிபர் செந்தில்குமார் வைத்தியநாதன், அம்மன் கோயில் வீதி தொழிலதிபர் திருநாவுக்கரசு, கொப்பனாபட்டி கார்த்திக் வீரன், முருக்கபட்டி துரை, மம்மிடாடி ரெடிமேட் திக்குருல்லா ஆகியோரின் நிதி பங்களிப்பில் ரூ. 16 ஆயிரம் மதிப்பிலான 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவி யை அப்பள்ளி தலைமையாசிரியர் ராஜ்குமாரிடம், அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தினர் வழங்கினர். இதில் அப்பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர் மூர்த்தி, அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story