திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டம்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டம்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்
X

பொன்னமராவதியில் திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார்.

ஏப்ரல் 3 - ஆம் தேதி முதல் மார்ச் 3- ஆம் தேதி வரை இந்த உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெறுகிறது

பொன்னமராவதியில் திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உடன் பிறப்புகளாய் இணைவோம் திமுகவிற்கு ஒரு கோடி உறுப்பினர்கள் புதிய சேர்க்கை திட்டத்தின் படி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னாள் முதல்வரும், முன்னாள் கழக தலைவருமான கருணாநிதியின்,நுாற்றாண்டு தொடக்கம், கழக பவள விழா ஆண்டையொட்டி, 'உடன்பிறப்பாய் இணைவோம்' இயக்கம் மூலம், புதிதாக உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் சென்னையில் தொடக்கி வைத்தார். ஏப்ரல் 3 - ஆம் தேதி முதல் ஜூன் 3- ஆம் தேதி வரை இந்த உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதன் மூலம் கட்சியில் கோடி உறுப்பினர்களை திமுகவில் சேர்க்கும் பணி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது..

அதன்படி, பொன்னமராவதி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் உடன்பிறப்புகளாக இணைவோம் என்ற பெயரில் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை முகாமை, புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமான ஆண்கள், பெண்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இதில், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தசாமி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, நகரச்செயலாளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், இளைஞரணி இளையராஜா, தகவல் தொழில்நுட்பபிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆலவயல் முரளி சுப்பையா, பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன், சீமாட்டி லத்தீப், ஆலவயல் அழகப்பன் அம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story