புதுக்கோட்டை அருகே புலிவலம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை அருகே புலிவலம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
X
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புலிவலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 120க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நோக்கில் ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் மாவட்டத்தின் சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலம் பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் முதல் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதோடு விருப்பமுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பாயி கலந்து கொண்டு முதல் தடுப்பூசியை போட்டு கொண்டார். பின்னர் கிராமத்தில் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட 120 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி முகாமிற்கான ஏற்பாடுகளை புலிவலம் பஞ்சாயத்து, விராச்சிலை ஆரம்ப சுகாதார மையம் செய்திருந்தது.

Tags

Next Story
ai in future agriculture