கோழிகள் மாயம் ஓய்வு வி.ஏ.ஓ. போலீசில் புகார்

தோட்டத்தில் வளர்க்கப்படும் கோழிகள் மாயமாகி விடுவதாக ஓய்வு வி.ஏ.ஓ. காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியிலிருந்து சொக்கநாதபட்டி செல்லும் சாலையில் உள்ள ஓய்வுபெற்ற விஏஓ பெருமாளின் தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தில் கோழிகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. கோழியை மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கோழியை திருடியுள்ளார். அவர் திருடியது அங்கு பொருத்தப்பட்டுருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் ஓய்வு பெற்ற விஏஓ பெருமாள் பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும் அவர் அளித்த புகார் மனுவில் கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பகுதியில் கோழி திருட்டு சம்பவம் அதிகம் நடைபெற்று வருகின்றது.

அதனை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக கோழி கூண்டு அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாத்து வந்ததாகவும், இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கோழியை திருடிச் சென்றுள்ளதாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

மேலும் சிசிடிவி காட்சியை வைத்து கோழியை திருடிச் சென்ற மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் பெருமாள் புகார் மனு அளித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!