புத்தாண்டை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப்பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே புத்தாண்டை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
திருமயம் அருகேயுள்ள பரளி கிராமத்தார் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் ஆண்டு தோறும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 11 -ஆவது ஆண்டுக்கான மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் இன்று நடைபெற்றது.
பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக எல்கைப் பந்தயம் நடத்தப்பட்டது. பெரிய மாட்டு வண்டி பிரிவுக்கு 8 கிமீ தொலைவும், சிறிய மாட்டு வண்டி பிரிவுக்கு 6 கிமீ தொலைவும் பந்தய எல்கையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இப்போட்டிகளில், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் 7 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 18 ஜோடிகள் என மொத்த 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
சிறிய மாட்டு வண்டி பிரிவில், பரளி , சேத்துப்பட்டி, வடுகப்பட்டி, விராமதி ஆகிய ஊர்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் முறையே முதல் நான்கு இடத்தை பிடித்தன.
பெரியமாட்டு வண்டி பிரிவில், வலையவயல், மாவூர், பரளி, பில்லமங்கலம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் முறையே முதல் நான்கு இடத்தைப் பிடித்தன.
பெரிய மாட்டு வண்டிப்பிரிவில் வென்ற மாட்டு வண்டிகளுக்கு முறையே ரூ. 14,001, 13,001, 11,001, 5001 ஆகிய ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறிய மாட்டு வண்டிப்பிரிவில் வென்ற மாட்டு வண்டிகளுக்கு முறையே ரூ.11,001, 9001, 7001, 4001 ஆகிய ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளா பரளி கிராம விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu