பொன்னமராவதியில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் விழா

பொன்னமராவதியில் சுதந்திர போராட்ட  தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் விழா
X

பொன்னமராவதியில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா

Birthday celebration Tiyagi Viswanathadas at Ponnamaravathi

பொன்னமராவதியில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மருத்துவர் சமூக நலச்சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸின் 136 -ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.பொன்னமராவதி மருத்துவர் சமூக சங்கத்தின் ஒன்றியத் தலைவர் செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் துரைபாண்டியன், ஒன்றியப் பொருளாளர் சந்திரசேகர் தலைமையில், நகர சங்கத்தின் தலைவர் சுரேஸ், செயலாளர் கதிர்,பொருளாளர் சோனா செல்வம் ஆகியோர் முன்னிலையில் காந்தி சிலை அருகில் அமைக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினர்.

இதில், ஒன்றியச் செயலாளர் துரைபாண்டியன் பேசுகையில் சிவகாசியில் சுப்ரமணியம் – ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த விஸ்வநாததாஸ் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்ல சிறந்த நாடக கலைஞரும் ஆவார். சுதந்திர போராட்ட வீரர் விஸ்வநாததாஸின் பிறந்த நாளில் ஒற்றுமை கலை, கலாசாரத்தை பேணிக் காக்கும் வண்ணம் இன்நன்நாளில் என உறுதி மொழியேற்போம் என்று குறிப்பிட்டார். விழாவில் ஒன்றிய, நகர மருத்துவர் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business