புதுக்கோட்டை அருகே சைல்டு லைன் சார்பில் குழந்தை தொழிலாளரை தவிர்க்க விழிப்புணர்வு

புதுக்கோட்டை அருகே சைல்டு லைன் சார்பில் குழந்தை தொழிலாளரை தவிர்க்க விழிப்புணர்வு
X

சைல்டு லைன் சார்பில் திருமயம் பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்ற  குழந்தைத்தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு  கையெழுத்து இயக்கம்

Awareness to avoid child labor on behalf of Child Line near Pudukkottai

திருமயத்தில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்த கூடாது என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான கையெழுத்து இயக்க விழிப்புணர்வு நடைபெற்றது. திருமயம் பேருந்து நிலையம் வளாகத்தில் ஆர்டிஓ சைல்டு லைன் இயக்குநர் குழந்தைவேல் மற்றும் திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மற்றும் திருமயம் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியபாமா,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப்பணியாளர் சசிகலா ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

இதில், தன்னார்வலர்கள்,பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் குர்ஜாத்பானு, அன்பழகன், ஆரோக்கிய ராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரத்தினம், பனையபட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், ரமேஷ், காவலர் கார்த்திக்,வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அருண் ஆரோக்கிய மேரி,திருமயம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், 1098 சைல்டு லைன் திருமயம் களப்பணியாளர் ராஜலெட்சுமி, பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி மற்றும் கல்லுரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டனர்.

Tags

Next Story
ai solutions for small business