திருமயம் அருகே சர்வதேச விரைவு ரேட்டிங் சதுரங்க போட்டி

திருமயம் அருகே சர்வதேச விரைவு ரேட்டிங் சதுரங்க போட்டி
X

திருமயம் அருகே சர்வதேச விரைவு ரேட்டிங் சதுரங்க போட்டி நடைபெற்றது.

திருமயம் அருகே லெனாவிலக்கு மவுண்ட் சீயோன் பள்ளியில் சர்வதேச விரைவு ரேட்டிங் சதுரங்க போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள லெனா விலக்கு மவுண்ட் சீயோன் சிபிஎஸ்சி பள்ளியில் உலக சதுரங்க கழக தரவரிசைப் பட்டியலுக்காக எஸ்.ஏ.கேஸ்ட்டல் பயிற்சி நிறுவனத்தினர் நடத்திய சர்வதேச விரைவு ரேட்டிங் சதுரங்க போட்டி நடைபெற்றது.

நிகழ்விற்கு மவுண்ட் சீயோன் பள்ளி தாளாளர் ஜோனாதன் ஜெயபரதன் தலைமை வகித்தார். மாவட்ட சதுரங்கக்கழக துணைச் செயலர் அடைக்கலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சதுரங்க கழக செயலர் பேராசிரியர் கணேசன் வரவேற்றார்.

போட்டியினை திருச்சி சரக டிஐஜி பகலவன், புதுக்கோட்டை மூத்த மருத்துவர் ராமசாமி, வழக்கறிஞர் சொக்கலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்வில் சதுரங்க வீரர்கள் அங்கப்பன், பார்த்திபன், ஜெயக்குமார், சுப்ரமணியன், அருணாச்சலம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

ஒரு நாள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆந்திரா, பாண்டிச் சேரி, த மிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐந்து வயது முதல் 90 வயது முதியவர் வரை என 280 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியானது 9 சுற்றுகள் நடைபெற்றன. இதில் நான்கு கேட்டகிரிகளாக அதாவது 1200, 1400, 1600, என்ற மதிப்பெண் பெற்ற போட்டியாளர்களும் மற்றும் பொதுப் பிரிவுகள் என நான்கு கேட்டகிரிகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. அதேபோன்று இரண்டாம் பரிசாக இருபதாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. அதேபோன்று மூன்றாவது பரிசாக 15,000 ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.இதனை அடுத்து பொதுப் பிரிவில் வெற்றி பெற்ற 50 பேருக்கு ரொக்க பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இப்போட்டியில், ஶ்ரீஹரி, ஹரிகிருஷ்ணன், முரளிகிருஷ்ணன், ராமநாதன், லட்சுமி உள்ளிட்ட சர்வதேச செஸ் மாஸ்டர்கள் விளையாடினர். மேலும் அமெரிக்காவில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் மற்றும். மாற்றுத்திறனாளி இரண்டு பேரும், பார்வையற்றோர் ஒருவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil