திருமயம் தொகுதியில் ரூ.1.23 கோடியில் புதிய திட்டங்கள்:அமைச்சர் ரகுபதி தொடக்கம்

திருமயம் தொகுதியில் ரூ.1.23 கோடியில் புதிய திட்டங்கள்:அமைச்சர் ரகுபதி தொடக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்-பொன்னமராவதி பகுதியில் புதிய திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து அமைச்சர் எஸ். ரகுபதி தொடக்கி வைத்தார்.

பொன்னமராவதி-அரிமளம் பகுதி ரூ.98 லட்சத்தில் புதிய பணிகளுக்கு அடிக்கல், ரூ.25.25 லட்சத்தில் முடிவுற்ற பணிகள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி மற்றும் அரிமளம் ஒன்றியப் பகுதிகளில்ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு; தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்.ரகுபதி பங்கேற்றுபுதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்ததுடன், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் பேசியதாவது; பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.25.25 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூரில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள, துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கு கட்டடப் பணி மற்றும் தொட்டியம்பட்டி ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள, உழவர்சந்தை கட்டுமானப் பணிகள் என மொத்தம் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

அரிமளம் ஊராட்சி ஒன்றியம், செங்கீரை ஊராட்சியில், ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோக அங்காடி, கும்மங்குடி ஊராட்சி, தேத்தாம்பட்டியில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம், காரமங்கலம் ஊராட்சி, கொங்கன் தெருவில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை, பிலியவயல் ஊராட்சி, ஏத்தநாடுகாலனியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம் என மொத்தம் ரூ.25.25 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.எனவே அரசின் இத்தகைய நலத்திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் வ.செல்வம், உதவி செயற்பொறியாளர் வெற்றிவேல் பாண்டியன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் மோகன்ராஜ், வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குநர் சங்கரலெட்சுமி, பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியன், ஊராட்சிமன்றத் தலைவர் கீதா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
நாமகிரிப்பேட்டையில் பெண் ஐ.டி ஊழியர் மீது தாக்குதல் - குற்றவாளி கைது