நத்தம் விசுவநாதன் உருவ பொம்மையை எரித்து அமமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

நத்தம் விசுவநாதன் உருவ பொம்மையை எரித்து அமமுக  நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்
X
பொன்னமராவதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவை அவதூறாக பேசிய அதிமுகவினரை கண்டித்து தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அதிமுகவினரை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare