மார்ச் 5 ல் தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தேர்வு: தயார் நிலையில் தமிழக மாணவர்கள்

மார்ச் 5 ல் தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தேர்வு: தயார் நிலையில் தமிழக மாணவர்கள்
X
தமிழகம் முழுவதும் மார்ச்.5 -ல் தேசிய வருவாய் வழி திறனாய்வுத்தேர்வில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்

தமிழகத்தில் மார்ச் 5 -ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வு (NMMS) சுமார் 2 லட்சம் பேர் பங் பங்கேற்கவுள்ளனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வில் பங்கேற்க, ஆண்டு வருமானம், ரூ.1.5 வட்சம் இருப்பதுடன், ஏழாம் வகுப்பு இறுதித் தேர்வில் 55 சதவீத மதிப் பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.. முந்தைய வகுப்பு பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகள், இந்தத் தேர்வில் இடம்பெறும். தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம், பிளஸ் 2 வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ஹாஸ்டிக்கெட் தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மாணவ, மாணவிகள் உள்பட சுமார் 2 லட்சம் பேர் தேர்வை எழுதவுள்ளனர். இத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் அந்தந்த மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்து கூறியது: மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள என்எம்எம்எஸ் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் 5,621 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். இதில், சுமார் 200 பேர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இவர்கள் அனைவருக்கும் பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் தோறும் ரூ.1000 வீதம் ரூ. 48 ஆயிரம் உதவித்தொகை பெறமுடியும். இதைப்போல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர் என்றார் அவர்.

Tags

Next Story