புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: அமைச்சர் கள் அறிஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: அமைச்சர் கள் அறிஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்பு
X
ஆகஸ்ட் 29 ல் தொடங்கும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அமைச்சர்கள் அறிஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்

புதுக்கோட்டையில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அமைச்சர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.

இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளது. 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அமைச்சர்கள், அதிகாரிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்று உரைநிகழ்த்த உள்ளனர்.

தொடக்க விழா:முதல் நாளான ஜூலை 29 காலையில் நடைபெறும் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகிக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே முன்னிலை வகிக்கிறார். புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்து சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளனர். அன்று மாலையில் நடைபெறும் நிகழ்வில் ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன், எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

தொடர்ந்து வரும் அடுத்தடுத்த நாட்களில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திரைக்கலைஞர் ரோகிணி, உடகவியலாளர் கார்த்திக்கேயன், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.பாலபாரதி, அறிவியல் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், சிறுபான்மை நல வாரியத் தலைவர் பீட்டர் அல்ஃப்போன்ஸ், பேராசிரியர் அப்துல்காதர், முனைவர் கோ.ப.நல்லசிவம், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மேனாள் துணைவேந்தர் சொ.சுப்பையா, கலைமாமணி நர்த்தகி நடராஜன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், இல்லம் தேடிக் கல்வி திட்ட இயக்குனர் க.இளம்பகவத் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். கவிச்சுடர் கவிதைப்பித்தன், கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் தலைமையில் கவிரங்கங்களும் நடைபெற உள்ளன.

நிறைவு நாளில் கலை இலக்கிய விருதுகளை வழங்கி நீதியரசர் சந்துரு, புத்தக விழாத் தொண்டர்களை கவுரவித்து உடகவியலாளர் கோபிநாத் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.மாணவர்களுடன் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் கலந்துரையாடல்

ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேலைகளில் புகத்தத் திருவிழாவிற்கு அழைத்துவரப்படும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ்.தினகரன், பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், கே.கலைமணி, அ.அமலராஜன், எம்.மாணிக்கத்தாய், கே.முத்துச்சாமி, கே.காத்தவராயன், எம்.தியாகராஜன், எஸ்.டி.பாலகிருஷ்ணன், ஜி.சுகுமாறன், எம்.சிவானந்தம், க.உஷாநந்தினி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கலை நிகழ்ச்சிகள்: ஒவ்வொரு நாள் மாலையிலும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்;ச்சிகள் நடைபெற உள்ளன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் புத்தகப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.மேலும், புத்தகத் திருவிழாவை நோக்கி வாசர்ககளை ஈர்க்கும் வகையில் சிறப்பு கழிவுகள் மற்றும் பரிசுத் திட்டங்களும் அறிவிக்கப்பட உள்ளன.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்