தொழிற்பயிற்சி பழகுநர் வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை

முகாமில் பங்கேற்ற 462 நபர்களில் 135 நபர்கள் பல்வேறு நிறுவனங்கள் மூலமாக தொழிற்பழகுநர் களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

HIGHLIGHTS

தொழிற்பயிற்சி பழகுநர் வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை
X

பைவ் படம்

மண்டல அளவிலான தொழிற்பயிற்சி பழகுநர் வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான தொழிற்பயிற்சி பழகுநர் வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு நேற்று வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்காக மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கைக்கான தொழிற் பழகுநர் மேளா புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழிற் பழகுநர்களை தேர்வு செய்தனர். 10,+2, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அதன்படி நேற்றைய தினம்; நடைபெற்ற முகாமில் 15 நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான 912 தொழிற் பழகுநர்களை தேர்ந்தெடுக்க முன் வந்தது நேற்று நடைபெற்ற முகாமில் பங்கேற்ற 462 நபர்களில் 135 நபர்களை பல்வேறு நிறுவனங்கள் மூலமாக தொழிற் பழகுநர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு தொழிற் பழகுநர்களுக்கான நியமன ஆணையை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

இம்முகாமில் உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முனைவர்.முருகேசன், மண்டல பயிற்சி இணை இயக்குநர் பி.பரமேஸ்வரி, உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்) .எஸ்.ராமர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன், அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர் எஸ்.குமரேசன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி பயிற்சி அலுவலர்வி.கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 21 March 2023 8:15 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...