மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கு: இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கு: இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
X

மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற குற்றவாளி  ராஜ்குமார் 

மாணவியின் பெற்றோர் கடந்த 2020 -ல் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் செய்து கர்ப்பமாக்கிய இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொன்னமராவதி அருகே மறவா மதுரை கங்காணி பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்( 34 ). கூலி த்தொழிலாளியான இவருக்கு ஏற்கெனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், ராஜ்குமார் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும் அந்த சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார் இதனால் மாணவி கர்ப்பமானார் அதை கலைக்க மருத்துவமனைக்கும் சென்று முயற்சி செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கடந்த 7 3 2020 ல் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியா, மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதற்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும் ரூ 75 ஆயிரம் அபராதமும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் சிறுமிக்கு ரூ 1.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி ஆண் குழந்தை பெற்றெடுத்து, அந்த குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future