காமராஜபுரம் மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டுமென வாலிபர் சங்கம் கோரிக்கை

காமராஜபுரம் மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டுமென வாலிபர் சங்கம் கோரிக்கை
X

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காமராஜபுரம் கிளைத் துவக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காமராஜபுரம் கிளைத் துவக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது

புதுக்கோட்டை காமராஜபுரம் மக்களின் குடிநீர்ப் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வுகாண வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காமராஜபுரம் கிளைத் துவக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவர் ஜெ.மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல் சங்கத்தின் கொடியை ஏற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் துரை.நாராயணன், மாவட்டத் தலைவர் ரா.மகாதீர், நகரச் செயலாளர் கு.ஜெகன், சிஐடியு நகரச் செயலாளர் சரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கிளை துணைச் செயலாளர் தீபன் நன்றி கூறினார். காரமராஜபுரம் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான குடிநீர்ப் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் தீர்வுகாண வேண்டும். அப்பகுதியில் புறம்போக்கில் குடியிருந்துவரும் ஏழைகளுக்கு பட்டா கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் துவக்க விழாவில் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story