தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் மற்றும் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பைல் படம்
தமிழ்ச்செம்மல் விருது பெற 21.12.2022 -க்குள்ளாகவும் அவ்வையார் விருதுக்கு 26 .12.2022 தேதிக்குள்ளாகவும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்து முகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டு;தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ்ச்செம்மல் விருதாளர்களுக்கு ரூ.25000- ரொக்கப் பரிசுத்தொகையும் தகுதியுரையும் வழங்கப்பெற்று வருகின்றன. இவ்வகையில் 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தினை இருபடிகளில் உரியவாறு பூர்த்தி செய்து, தன்விவரக்குறிப்பு, நூல்கள், கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் ஒரு படி இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தக்குப் பணிகள் தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக் கடிதம், மாவட்டத்தில் செயற்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்களுடன், ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கானச் சான்றுகளையும் இணைத்து புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 21.12.2022 -ஆம் நாளுக்குள் கிடைக்கப்பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04322-228840, 99522 80798 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரையோ நேரில் தொடர்பு கொள்ளலாம்.
மாநில அரசின் அவ்வையார் விருது பெற டிச.26 -க்குள் விண்ணபிக்கலாம்:
உலக மகளிர் தினமான மார்ச் 8 அன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்த தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட தகுதியான நபருக்கு மாநில அரசின் அவ்வையார் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றி வருகின்ற தனி நபரை அங்கீகரிக்கும் விதமாக மாநில அரசின் அவ்வையார் விருது வழங்கிட தகுதியான விண்ணப்பங்களை 26.12.2022 க்குள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விருதிற்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தின் மூலம் 23.12.2022 வரை விண்ணபிக்கலாம்.
தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ரூ.1,00,000- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) ரொக்கப்பரிசு, 8 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்க பதக்கம், மற்றும் சால்வை முதலமைச்சர் அவர்களால் உலக மகளிர் தின விழா அன்று வழங்கப்படும்;. மேலும் கையேட்டில் (Booklet) இணைக்கப்பட வேண்டிய விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை (04322- 222270) தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu