தொடர் நடனமாடி செஸ் குறித்து அதிக விழிப்புணர்வை பரப்பி உலக சாதனை

தொடர் நடனமாடி செஸ் குறித்து அதிக விழிப்புணர்வை பரப்பி உலக சாதனை
X

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தொடர் நடனமாடி செஸ் குறித்து அதிக விழிப்புணர்வு செய்திகளை பரப்பியதால் உலக சாதனைக்கான ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழf சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமுவிடம் வழங்கப்பட்டது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தொடர் நடனமாடி செஸ் குறித்து அதிக விழிப்புணர்வு உலக சாதனை

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தொடர் நடனமாடி செஸ் குறித்து அதிக விழிப்புணர்வு செய்திகளை பரப்பியதால் உலக சாதனைக்கான ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழf சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமுவிடம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், மாவட்ட நிருவாகத்தின் சார்பில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 1088 நபர்கள் 8 மணி நேரம் தொடர் நடனமாடி 2003 செஸ் குறித்து விழிப்புணர்வு செய்திகளை பரப்பி நடைபெற்ற நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (யுளயை டீழழம ழக சுநஉழசனள) உலக சாதனைக்கான சான்றிதழை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக் நாயர் (25.07.2022) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி உலக சாதனை நிகழ்வாக மாவட்ட நிருவாகம் சார்பில் தொடர்ந்து 8 மணி நேரம் 1088 நபர்கள் மூலம் 2003 விழிப்புணர்வு செய்திகளின் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த உலக சாதனை நிகழ்வை ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

இந்த சாதனை முயற்சிக்கு காரணமான மாவட்ட நிருவாகத்திற்கும், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் சிறப்பான முறையில் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள்.எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் கலைகளில் சிறந்து விளங்குவதோடு, விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிவண்ணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள்; கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி