மனைவி, மாமியாரை கொலை செய்ய முயற்சி செய்தவருக்கு மகிளா நீதிமன்ற ஆயுள் தண்டனை

மனைவி, மாமியாரை கொலை செய்ய முயற்சி செய்தவருக்கு மகிளா நீதிமன்ற ஆயுள் தண்டனை
X

மனைவி, மாமியாரை கொலை  செய்ய முயற்சி செய்த கணேசனுக்கு இன்று ஆயுள்   தண்டனை விதித்து மகிளா  நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரிவாளால் வெட்டியதில் இரண்டு பெண்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்

மனைவி, மாமியாரை வெட்டி கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மியூசியம் அருகே பெட்டி கடை நடத்தி வருபவர் வளர்மதி. இவருடைய மருமகன் கணேசன்( 33 ). இவரது தந்தை காந்தி ராயவரம் கிராமத்தை சேர்ந்தவர்

வளர்மதியின் மகள் சண்முகவள்ளியை கணேசனுக்கு திருமணம் முடித்த பிறகு, அடிக்கடி பணம் கேட்டு சொத்தை பிரித்து வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தினாராம். இதனால் சண்முகவள்ளி, கணவர் வீட்டில் வசிக்காமல் திருக்கோகர்ணத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், 3.7.2016 அன்று மதியம் 2 மணி அளவில் பெட்டி கடையில் இருந்த கணேசனின் மனைவி சண்முகவள்ளி மற்றும் மாமியார் வளர்மதியிடம், கணேசன் வாய்த்தகராறில் ஈடுபட்டபோது, அரிவாளால் வெட்டியதில் இரண்டு பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இது சம்பந்தமாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், திருக்கோகர்ணம் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்மாறன் வழக்கு பதிவு செய்து அன்று இரவு 8 மணி அளவில் கணேசனை காவல்துறையினர் கைது செய்தனர்.,இந்நிலையில் இது சம்பந்தமான வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார்.

இந்தத் தீர்ப்பில் கணேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், மனைவி சண்முக வள்ளியை வெட்டிய வழக்கில் மூன்று வருட சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.மனைவியை கொடுமைப்படுத்தியதற்க்கு 3 ஆண்டுகள் தண்டனையும், மாமியார் மற்றும் மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டியதற்கு 7 வருட தண்டனை விதிப்பதாக மகிளா நீதிமன்ற நீதிபதி டாக்டர் சத்யா இன்று தீர்ப்பை வழங்கினார்.

.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா