அக்னிநட்சத்திரம்… புதுகை சாந்தநாதர் ஆலய நந்தீஸ்வரருக்கு தண்ணீர் அபிஷேகம்

அக்னிநட்சத்திரம்… புதுகை சாந்தநாதர் ஆலய நந்தீஸ்வரருக்கு தண்ணீர் அபிஷேகம்
X

புதுக்கோட்டை சாந்தநாதர் ஆலயத்தில் நந்திகேசுவரருக்கு நடைபெற்ற தண்ணீர் அபிஷேகம் மஹாதீபாராதனை

பிரதோஷ வழிபாட்டில் நந்திகேஸ்வரருக்கு அக்னி நட்சத்திர வெப்பம் குறையவும் நல்ல மழை வேண்டியும் தண்ணீர் அபிஷேகம் நடந்தது

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்திகேஸ்வ ருக்கு அக்னி நட்சத்திரத்தையொட்டி நல்ல மழை வேண்டியும் கடும்வெயில் குறைய வேண்டியும் தண்ணீர் அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை செய்யப்பட்டது.

புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகிஉடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு நந்திகேஸ்வர ருக்கு அக்னி நட்சத்திரத்தையொட்டி நல்ல மழை வேண்டியும் கடும் வெயில் குறைய வேண்டியும் தண்ணீர் அபிஷேகம் மஹா தீபாராதனை, மங்கள இசையுடன் பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து, வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமிக்கு பாலபிஷேகம் பன்னிர் தயிர் இளநீர் சந்தனம், மஞ்சள் நீர் திருநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் சந்தனக்காப்பு மலர் அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது. மாலையில், நந்திகேஸ்வரருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பின்னர் நந்திகேஸ்வரருக்கு அக்னி நட்சத்திரத்தையொட்டி நல்ல மழை வேண்டியும் கடும் வெயில் குறைய வேண்டியும் தண்ணீர் அபிஷேகம் மஹா தீபாராதனை நடந்தது. சாந்தநாதசுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் அருள்மிகு வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி மலர் அலங்காரத்தில் ஆலயத்தில் உலா வந்தது. ஏற்பாடுகளை, பிரதோஷ வழிபாட்டுக்குழு தலைவர் மல்லிகாவெங்கட்ராமன், திருக்கோவில் நிர்வாகிகள் அரிமளம் ரவி சிவாச்சாரியார் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்

Tags

Next Story