மே.1 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் 1.5.2022 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவித்துள்ளார்.
உலக தொழிலாளர் தினமான 01.05.2022-ஆம் தேதியன்று காலை 11.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், சுகாதாரம் (பள்ளிக் கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி கழிப்பறைகள்), ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம்.நிதி செலவின விவரங்கள், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஊட்டசத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), விரிவான கிராம சுகாதார திட்டத்தைப் பற்றி விவாதித்தல், ஜல் ஜீவன் திட்டம், வேளாண் – உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.
மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu