கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் ஒத்திவைப்பு:தகவல்அறியாமல் வந்தவர்கள் சாலைமறியல்

கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் ஒத்திவைப்பு:தகவல்அறியாமல் வந்தவர்கள் சாலைமறியல்
X

 புதுக்கோட்டை மச்சுவாடி சாலையில் கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டதால் நேர்காணல் வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

தங்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்காததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிரமப்பட்டு வந்ததாக புகார் கூறினர்

புதுக்கோட்டையில் நேர்காணலுக்கு வந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதே போல் புதுக்கோட்டை மச்சுவாடி அருகே உள்ள கால்நடை பண்ணை வளாகத்தில் கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் தொடர்ந்து 6 நாட்களாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 காலி பணியிடங்களுக்கு தொடர்ந்து 6 நாட்களாக நேர்காணல் நடைபெற்று வந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் கால்நடை உதவியாளர் பணிக்கான நடைபெற்றுவந்த நேர்காணல் நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் நிறுத்தி வைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இன்று காலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் நடைபெறும் வளாகத்தில் குவிந்தனர்.

அப்பொழுது கால்நடை பண்ணை வெளிப்புறத்தில் இன்று நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நேர்காணலுக்கு வந்தவர்கள் தங்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்காததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளோம் என கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் மச்சுவாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கணேஷ் நகர் காவல் நிலைய காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முறையில் தங்களுக்கு வேலைக்கான அழைப்புதல் விரைவில் வரும் என எடுத்துக் கூறி அழைத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா