வேங்கைவயல் விவகாரம்: 10 பேரிடம் மரபணு சோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு

வேங்கைவயல் விவகாரம்: 10 பேரிடம் மரபணு சோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு
X
கடந்த ஏப்ரலில் 11 பேருக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபி சிஐடி போலீஸார் முடிவு செய்து, நீதிமன்ற அனுமதியுடன் ஏற்பாடு செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கான குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த 26.12.2022 ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கை சிபி சிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மனிதக்கழிவு, சென்னை யிலுள்ள தடயஅறிவியல் சோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, அந்த மனிதக்கழிவு யாருடையது என கண்டறியும் நோக்கில், மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபி சிஐடி போலீஸார் முடிவு செய்தனர்.

கடந்த ஏப்ரலில் 11 பேருக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபி சிஐடி போலீஸார் முடிவு செய்து, நீதிமன்ற அனுமதியுடன் ஏற்பாடு செய்தனர். இவர்களில் 3 பேர் மட்டுமே ரத்த மாதிரிகளைக் கொடுத்துச் சென்றனர். மற்றவர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேலும் 10 பேரிடம் மரபணு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு, அவர்கள் திங்கள்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரவழைக்கப் பட்டனர்.

கடந்த முறை 11 பேரில் 3 பேர் மட்டுமே வந்த நிலையில், தற்போதைய சோதனைக்காக 10 பேரும் வந்து ரத்த மாதிரிக ளைக் கொடுத்தனர்.இந்த 10 பேரில் 7 பேர் இறையூரைச் சேர்ந்தவர்கள், 2 பேர் வேங்கைவயலைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மேலமுத்துக்காட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

Tags

Next Story