புதுகை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் தடுப்பூசி விழிப்புணர்வு நோட்டீஸ்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை மாவட்ட கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தியிடம் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது 15வயது முதல் 18வயது வரையுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோவிட் - 19 தடுப்பூசி அரசாங்கத்தின் சார்பில் போடப்பட்டு வருகிறது. இது குறித்து மாணவர்களிடையை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரம், புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர். சாமி. சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு துண்டு பிரசுரத்தினை வெளியிட்டனர். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, ரோட்டரி துணை ஆளுநர் சிவாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் (சமக்ர சிக்சா) தங்கமணி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஜெய் பார்த்தீபன், ஓவியர் ரவி, கதிரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu