நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: பாஜக சார்பில் போட்டியிட நிர்வாகிகள் விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: பாஜக சார்பில் போட்டியிட நிர்வாகிகள் விருப்ப மனு
X

புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில்  உள்ளாட்சித்தேர்தலுக்கான விருப்பமனு பெறப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி 33 -ஆவது வார்டு, தேமுதிக வட்டச்செயலாளர் செல்வராஜ் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்

புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டது

மாவட்ட துணைத்தலைவர் ஏவிசிசி. கணேசன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவசாமி,ரெங்கசாமி, மாவட்டச் செயலாளர்கள் விஜயகுமார்,வீரன் சுப்பையா,நகரத் தலைவர் சுப்பிரமணியன்,தொழில் பிரிவு மாநிலச் செயலாளர் செல்வ அழகப்பன்,மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் மணிராஜன், மாவட்ட தொழில் பிரிவு தலைவர் சீனிவாசன்,மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் மணிசுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகரப் பொதுச் செயலாளர் லெட்சுமணன் ஒருங்கிணைப்பில், நகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

முன்னதாக, புதுக்கோட்டை நகராட்சி உசிலங்குளம் பகுதி 33 வது வார்டு, தேமுதிக வட்டச் செயலாளர் செல்வராஜ் அக்கட்சியிலிருந்து விலகி,தேமுதிக உறுப்பினர் அட்டையை மாவட்டத் துணைத் தலைவரும்,பாஜக நகராட்சித் தேர்தல் பொறுப்பாளர் ஏவிசிசி கணேசனிடம் ஒப்படைத்துவிட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!