செவிலியர்களுக்கு சால்வையணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த மரம் நண்பர்கள்

புதுக்கோட்டை அரசு மருது்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி மரம் நண்பர்கள் குழுவினர இனிப்பு, சால்வை அணிவித்து நர்சுகளை பாராட்டினர்.

உலக செவிலியர்கள் தினம் செவிலியர்களின் பணி என்ன என்பது கொரோனதொற்று காலத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு மட்டுமே செவிலியர்களின் பணி என்பது தெரியும்.

உறவினர்கள் கூட வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு சென்று பார்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் செவிலியர்கள் நேரடியாக வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகளிடம் சென்று மருந்துகள் வழங்குவது அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பது போன்ற பல்வேறு பணிகளை செய்து வந்தனர்.

இந்த வைரஸ் தொற்று காலத்தில் செவிலியர்களின் பணி மிகவும் பாராட்டுதலுக்குரியது உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் செவிலியர்களை பாராட்டி வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் 10கும் மேற்பட்டவர்கள் மரம் நண்பர்கள் சார்பாக இயற்கை விவசாயி சமூக ஆர்வலருமான கண்ணன் மூர்த்தி, தினேஷ், ரியாஸ் கான், ஆகிய நண்பர்கள் இன்று உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் அவர்களை கவுரவித்தனர் கொரோன வைரஸ் தொற்று காலத்தில் செவிலியர்கள் உங்களுடைய பணி மிக சிறப்பு வாய்ந்தது என அவர்களை பாராட்டி கவுரவ படுத்தினர்

Tags

Next Story
ai marketing future