குமரமலை பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபம்

குமரமலை பாலதண்டாயுதபாணி ஆலயத்தில்  கார்த்திகை தீபம்
X

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயிலில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்

புதுக்கோட்டை அருகே குமரமலை மற்றும் சாந்தநாதர் ஆலயங்களில் கார்த்திகை தீப விழா கோலாகலமாக நடைபெற்றது

புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த குமரமலை பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

புதுக்கோட்டை அருகே குமரமலையில் அமைந்துள்ள புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து கோவில் மேல் தளத்தில் ஒன்றரை அடி உயரம் உள்ள 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் ஆறு கிலோ எடை கொண்ட திரியை வைத்து சிவாச்சாரியார் வேத மந்திரம் முழங்க பக்தர்களின் அரோகரா அரோகரா என்ற முழக்கங்கள் எழுப்பியவாறு தீபம் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கார்த்திகை தீபத்தை கண்டு களித்து பின்னர் சுவா தரிசனம் செய்து சென்றனர். புதுக்கோட்டை கோயில்கள் நிர்வாக அதிகாரி முத்துராமன், மேற்பார்வையாளர்கள் மாரிமுத்து, தெட்சிணாமூர்த்தி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்தனர்,

இதேபோல் புதுக்கோட்டை நகரிலுள்ள அருள்மிகு வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோயிலில் சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன, தொடர்ந்து கோயில்கள் சிறப்பு ஆராதனைகளுக்கு பின் மேல் தளத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டன,தொடர்ந்து பின்னர் கோயிலின் முன்பு சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சொக்கப்பான் கொளுத்தப்பட்டன, நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி அம்மனை வழிபட்டனர்,பின்னர் தீபங்களை ஏற்றி அர்ச்சனைகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil