தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை அண்ணா சிலையில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசின் தள்ளுபடி திட்ட பயனாளிகள் பட்டியலை விரைந்து நிறைவு செய்து சங்கங்களின் இயல்பான பரிவர்த்தனைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் தொகுப்பை பேக்கிங் செய்து அரசு ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின்னர் அச்சங்கத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியன்செய்தியாளர்களிடம் பேசியதாவது: நகை கடன் தள்ளுபடி மற்றும் பயிர் கடன் வழங்குவதில் அரசு பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருவதால் கூட்டுறவு பணியாளர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் பல்வேறு சோதனைகள் என்ற பெயரில் அதிகாரிகளுக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது .சோதனைகள் முடிந்த பிறகும் தள்ளுபடி குறித்த எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. இதேபோன்று பயிர்க்கடன் வழங்குவதிலும் அலுவலர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது.நிர்வாக ரீதியிலும் துறை ரீதியிலும் பல்வேறு அழுத்தங்கள் அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.
அந்த அழுத்தத்தால் தான் கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கீரனூர் ஊரக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் சோதனை என்ற பெயரில் சங்க செயலாளருக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு அவர் மன உளைச்சலில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். எங்களுக்கு நகைக்கடன் சோதனை மற்றும் பயிர் கடன் வழங்குவதில் அரசு அதிகாரிகள் பல்வேறு அழுத்தங்களை கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்கு கொடுக்கின்றனர் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu