நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்: வேளாண்துறை தகவல்

கூடுதல் மகசூல் கிடைப்பதால் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

HIGHLIGHTS

நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்: வேளாண்துறை தகவல்
X

பைல் படம்

நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்படுவதாக வேளாண்துறை தகவல் தெரிவித்துள்ளது.

குறைந்த தண்ணீர் மற்றும் மருந்து தேவை, எதிர்பார்க்கும் மகசூல் கிடைப்பதால், உவர்ப்பு நீர் பகுதிகளில், விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு வாயிலாக, நெல் பயிரிட்டு வருகின்றனர். நேரடி நெல் விதைப்பால், நடவு கூலி, மருந்து செலவினம், தண்ணீர் தேவை குறைவதுடன், அதிக துார்களுடன் நெற்பயிர்கள் வளர்வதால், கூடுதல் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி வட்டாரத்தில் 6150 எக்டரிலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 12350 எக்டரிலும், மணமேல்குடி வட்டாரத்தில் 8200 எக்டரிலும், அரிமளம் வட்டாரத்தில் 3750 எக்டரிலும், நேரடி நெல் விதைப்பு செய்யப்படுகிறது.

2022-23 ஆம் வருட, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின்கீழ் (FNS-Rice), நேரடி நெல் விதைப்பு தொகுப்பு செயல் விளக்கங்கள், எக்டருக்கு ரூ.7500- மானியத்தில், அறந்தாங்கி வட்டாரத்தில், 30 எக்டரில் அமைக்க, ரூ.2.25 இலட்சம், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 30 எக்டரில் அமைக்க ரூ.2.25 இலட்சம், மணமேல்குடி வட்டாரத்தில், 30 எக்டரில் அமைக்க ரூ.2.25 இலட்சம் மற்றும் அரிமளம் வட்டாரத்தில், 10 எக்டரில் அமைக்க ரூ.0.75 இலட்சமும், மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அறந்தாங்கி வட்டாரத்தில், ஆயிங்குடி, களக்காடு மற்றும் தாந்தாணி பகுதிகளிலும், ஆவுடையர்கோவில் வட்டாரத்தில், பாண்டிபத்திரம் பகுதியிலும், மணமேல்குடி வட்டாரத்தில் விச்சூர், கானாடு மற்றும் கம்பர் கோவில் பகுதிகளிலும், அரிமளம் வட்டாரத்தில் இரும்பாநாடு மற்றும் குருங்களூர் பகுதிகளிலும். நேரடி நெல் விதைப்பு தொகுப்பு செயல்விளக்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான செயல் விளக்கங்கள் யாவும், புதுக்கோட்டை மாவட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் அமலாக்கம் செய்யப்படும் கிராமங்களில், செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

செயல் விளக்கங்கள் அமைக்கத் தேவையான நேரடி நெல் விதைப்புக்குரிய நெல் விதைகள், வரப்புப் பயிராக விதைப்பு செய்யக்கூடிய உளுந்து விதைகள், நெல் விதைகளுக்கு, விதை நேர்த்தி செய்து விதைக்கப் பயன்படும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா மற்றும் நெல் விதைப்பு செய்தவுடன் மேலாக இடக்கூடிய நெல் நுண்சத்து முதலிய இடுபொருட்கள் அந்தந்த வட்டாரங்களில், தொகுப்பு செயல் விளக்கங்களை செயலாக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

தொகுப்பு செயல் விளக்கங்களுக்கான இடுபொருட்களை புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மெ. சக்திவேல், துணை வேளாண்மை இயக்குநர் (மத்திய திட்டம்) . வி.எம். ரவிச்சந்திரன், செயல் விளக்க விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.

மணமேல்குடி வட்டாரத்தில், விச்சூர் கிராமத்தில் இயந்திரக் கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு பணிகள் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டன. ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் என்.சர்புதீன், தொழில் நுட்ப அலுவலர்கள் சி. கார்த்திக் மற்றும் பா. சரண்யா, வட்டார வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கெண்டனர்

Updated On: 8 Oct 2022 2:30 PM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
 2. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
 4. கீழ்பெண்ணாத்தூர்‎
  புதிய நீதிமன்றம் அமைய உள்ள கட்டிடம்; துணை சபாநாயகர் ஆய்வு
 5. திருவண்ணாமலை
  கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழக்கும் திட்டம், ஆட்சியர்...
 6. திருவண்ணாமலை
  பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு
 7. காஞ்சிபுரம்
  தங்க கிளி வாகனத்தில் கிளிநடை போட்டு வந்த காமாட்சி அம்மன்.
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அனைவருக்கும் நிலம் வழங்க பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி மாநில செயலாளர்...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில...
 10. லைஃப்ஸ்டைல்
  Variation Of Washing Soap And Powder கடின நீரில் சோப்புகள் கரையாது......