அரசு, தனியார் ஐடிஐ களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
பைல்
2023- ஆம் ஆண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 24.05.2023 முதல் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலமாக பெறப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்கும் முறை www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ்,முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்கான ஆவணம், இடப்பெயர்வு சான்றிதழ், ஆதார் அட்டை, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, புகைப்படம் -1) வந்து நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் - 2023 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. தமிழகத்தில்; உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் (Prospectus) தரப்பட்டுள்ளன.
விண்ணப்ப கட்டணம் ரூ.50- ஐ கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க் வாயிலாக செலுத்தலாம். மேலும் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750- வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 07.06.2023 ஆகும். மேலும், விவரங்களுக்கு தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை - 04322-221584, அரசு தொழிற் பயிற்சி நிலையம், விராலிமலை 8667426792 உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், புதுக்கோட்டை,04322-299382 ஆகிய அலைபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu