உலக சைவ தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற உலக சைவ தின கருத்தரங்கில் பேசுகிறார், வள்ளலார் மாணவர் இல்லத்தலைவர் டாக்டர் ராமதாஸ்
புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் உலக சைவ தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக மாத்தூர் வள்ளலார் மாணவர் இல்லத்தில் உலக சைவ தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் சன்மார்க்க த்தினர் கலந்து கொண்ட கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு மாவட்ட சன்மார்க்க சங்க தலைவர் ஸ்ரீ காத்தமுத்து சுவாமிகள் தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் முனியமுத்து இணை செயலாளர் திருநாவுக்கரசு துணைச் செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்தையா அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் வள்ளலார் மாணவர் இல்ல தலைவர் டாக்டர் ப.ராம்தாஸ் கலந்துகொண்டு சைவ நெறியின் மேன்மை குறித்தும், இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்தும் வள்ளல் பெருமானின் சன்மார்க்க உயர் நெறிமுறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். கூட்டத்தில் சன்மார்க்க நண்பர்கள் தங்களது அருள் அனுபவங்களைபற்றி பேசினார்
புதிதாக பங்கேற்ற இளைஞர்கள் தங்களை சன்மார்க்க சங்கத்தில் இணைத்துக்க் கொண்டனர் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த பல்வேறு சன்மார்க்க சான்றோர் பெருமக்களும் மாவட்ட துணை செயலாளர் பரமேஸ்வரன் மலையூர் ராமன் வணக்கம் காடு காசிநாதன் சிற்பி பாண்டியன் திருக்குறள் காசி மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.முடிவில் வள்ளலார் மாணவர் இல்ல கண்காணிப்பாளர் ரகுபதி நன்றி கூறினார்.
மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் சார்பில் வருகின்ற 14 10 2023 சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெறும் வள்ளல் பெருமான் வருவிக்கவுற்ற திருநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu