புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தை தொடக்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தை  தொடக்கி வைத்த  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
X

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தை தொடக்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

புதுக்கோட்டைத்தமிழ்ச்சங்கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் உலகப்புகழ் பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யா மொழி புகழாரம் சூட்டினார்.

புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம் தொடக்கவிழா, மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா புதுக்கோட்டை மகாராஜா மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்று பாரதியார் திருவுருவபடத்தைத் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கி வைத்து விழாப்பேருரையாற்றுகையில், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் உலகிலுள்ள மற்ற தமிழ்ச் சங்கங்களை விட மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, உலகப்புகழ் பெறும் என்று புகழாராம் சூட்டினார்.

பாரதியார் விழாக்களில் இந்த விழா மிகவும் தனித்துவம் மிக்கது. 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாரதியாராக வேடமணிந்து வந்தது, பாரதியைப் பார்த்தது போல மன மகிழ்ச்சியைத் தந்தது. பெருமைமிகு புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தை நான் தொடங்கி வைத்ததில் பெருமைய டைகிறேன் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி குறிப்பிட்டார்.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தனது தலைமையுரையில், இச்சங்கம் எல்லோர்க்கும் பொதுவானது தமிழை, தமிழறிஞர்களைக் கொண்டாடும் என்றார்.கவிஞர் வெங்கடேசன் எழுதிய “நான் சந்தித்த மனிதர்களில் – கவிஞர் தங்கம் மூர்த்தி” என்ற நூலை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். முதல் பிரதியை அழகப்பா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் சொ.சுப்பையா பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

சிகரம் சதீஷ்குமார் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டதன் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் குறித்து உரை ஆற்றினார். விழாவில், தமிழ்ச்செம்மல் விருது பெற்ற சந்திரன் மற்றும் தூய தமிழ்ப்பற்றாளர் விருது பெற்ற சிவநந்தினி விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மூத்த வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டி யன், ஞானாலயா ப.கிருஷ்ணமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

விழாவிற்கு வருகைதந்த அனைவருக்கும் பாரதியாரின் புகைப் படம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சௌமியா குழுவினரால் பாரதியார் பாடல்கள் பாடப் பெற்றது. முன்னதாக, செயலாளர் மகாசுந்தர் வரவேற்புரையாற்றினார். துணைச்செயலாளர் பீர்முகமது நன்றி கூறினார். இவ்விழா ஏற்பாடுகளை புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil