ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபை யினர் சார்பில் ராமநவமி மஹோத்ஸவம்

ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபை யினர் சார்பில்  ராமநவமி மஹோத்ஸவம்
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற ராமநவமி விழா

புதுக்கோட்டை தெற்கு 3ம் வீதியில் உள்ளஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் ராமநவமி மஹோத்ஸவம் நடந்தது

புதுக்கோட்டை தெற்கு 3-ஆம் வீதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம் நடந்தது.

புதுக்கோட்டை தெற்கு 3 -ஆம் வீதி மார்க்கெட் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம் கடந்த 10-ந்தேதி தொடங்கி பத்து நாட்கள் நடந்தது.

நிறைவு நாள் விழாவில் சீதா ராமர் பட்டாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் ராமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் அணிவிக்கப்பட்டு, பட்டாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும் ராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகாதீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆலயத்திலுள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆலய சிவாச்சாரியர் கே.மணிகுருக்கள் தலைமையில் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது பட்டாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீனிவாச சுந்தர்ராஜ் பாகவதரின் ராமாயண உபன்யாசம் மற்றும் சிறுவர் சிறுமியர்களின் இசை கச்சேரியும் பெரியவர்களின் கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம் முன்னிட்டு தினமும் பெருமாளுக்கும், ராமருக்கும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனையும், நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆனந்த் தலைமையில் அனுமன் திருச்சபையினர் ஆன்மிக நெறியாளர்கள் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில், ஆன்மீக அன்பர்கள் பூரணி செந்தில் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!